பங்குச் சந்தையில் மந்த நிலை

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டிக் கொள்கை அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பில் மும்பை பங்குச் சந்தை உள்ளிட்ட பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மந்த நிலையில் இருந்தது.
பங்குச் சந்தையில் மந்த நிலை

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டிக் கொள்கை அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பில் மும்பை பங்குச் சந்தை உள்ளிட்ட பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மந்த நிலையில் இருந்தது.
தொடர்ச்சியாக எட்டு நாட்கள் லாபகரமாக நிறைவுற்ற மும்பை பங்குச் சந்தை வர்த்தக இறுதியில் 21 புள்ளிகள் சரிவுற்றது.
அமெரிக்க, ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் பரவலாக சரிவை சந்தித்தன. சர்வதேச அளவில் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பு இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. முக்கிய நிறுவனங்களான கோல் இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ, பாரத ஸ்டேட் வங்கி பங்குகள் இழப்பை சந்தித்தன. மேலும், எச்.டி.எஃப்.சி., சன் ஃபார்மா ஆகிய பங்குகளின் விலை 2.49 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்ததில் மும்பை பங்குச் சந்தையின் தொடர் முன்னேற்றம் தடைபட்டது. 
துறைவாரியாக உலோகத் துறை பங்குகள் அதிகபட்ச அளவில் இழப்பை சந்தித்தன. அடுத்தபடியாக, மூலதனப் பொருள்கள் துறை, மருத்துவம், நுகர்வோர் பொருள்கள் துறை பங்குகள் நஷ்டம் அடைந்தன.
எனினும் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்கு முதலீட்டில் தொடர்ந்து நம்பிக்கை வைத்து முதலீடுகளைச் செய்து வந்தன. நிகர அளவில் ரூ. 775.61 கோடி மதிப்பிலான பங்குகளை உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வாங்கின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நிகர அளவில் ரூ. 96.92 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த எட்டு வர்த்தக நாட்களில் மும்பை பங்குச் சந்தையில் 761 புள்ளிகள் ஏற்றம் காணப்பட்டது. இந்நிலையில், மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 21 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 32,402 புள்ளிகளாக நிலைத்தது. 
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 5 புள்ளிகள் சரிவுடன் 10,148 புள்ளிகளாக நிலைத்தது. திங்கள்கிழமை வர்த்தகத்தின்போது நிஃப்டி 10,153 புள்ளிகள் என்னும் சரித்திர உச்ச அளவைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com