சிபிசிஎல் சுத்திகரிப்பு ஆலை அமைக்க ரூ.27,460 கோடி: ஐஓசி ஒப்புதல்

துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) ரூ.27,460 கோடியில் சுத்திகரிப்பு ஆலை அமைக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் (ஐஓசி) இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது.
சிபிசிஎல் சுத்திகரிப்பு ஆலை அமைக்க ரூ.27,460 கோடி: ஐஓசி ஒப்புதல்

துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) ரூ.27,460 கோடியில் சுத்திகரிப்பு ஆலை அமைக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் (ஐஓசி) இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து ஐஓசி நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் சிபிசிஎல் நிறுவன இயக்குநர்கள் குழு ரூ.27,460 கோடி செலவில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் திறனுள்ள சுத்திகரிப்பு ஆலையை நிறுவ வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.
ஐஓசி நிறுவனத்தின் துணை நிறுவனம் சிபிசிஎல் என்பதால் இந்த விரிவாக்க திட்டத்துக்கு ஐஓசி இயக்குநர்கள் குழுவின் ஒப்புதல் கோரப்பட்டது.
இந்த நிலையில் ஐஓசி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் செப்.22-ஆம் தேதி நடைபெற்றது. அதில், துணை நிறுவனமான சிபிசிஎல் நாகப்பட்டினம் காவேரி படுகையில், ரூ.27,460 கோடி செலவில் 90 லட்சம் டன் திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலை அமைக்க முதல் கட்ட ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. 
விரிவாக்க திட்டம் குறித்து முழு அளவிலான அறிக்கை தயார் செய்ததற்கு பின்பாக இறுதி கட்ட ஒப்புதல் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சிபிசிஎல் நிறுவனத்துக்கு சென்னை மணலியில் 1.05 கோடி டன் திறனுள்ள சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இதுதவிர, நாகப்பட்டினத்திலும் 10 லட்சம் டன் திறனுள்ள சிறிய சுத்திகரிப்பு ஆலை உள்ளது. 
இந்த நிலையில், தற்போது அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 90 லட்சம் டன் திறனிலான ஆலை சிபிசிஎல் நிறுவனத்தின் மூன்றாவது சுத்திகரிப்பு ஆலை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com