ஜி.எஸ்.டி. எதிரொலி: 'தோல் ஏற்றுமதி தொழிலுக்கு பாதிப்பு'

ஜி.எஸ்.டி. காரணமாக தோல் ஏற்றுமதி தொழில் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று தோல் ஏற்றுமதி கவுன்சில் தலைவர் முக்தாருல் அமீன் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி. காரணமாக தோல் ஏற்றுமதி தொழில் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று தோல் ஏற்றுமதி கவுன்சில் தலைவர் முக்தாருல் அமீன் தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தொல் தொழிலில் ஏற்றுமதி விற்றுமுதல் ரூ.36,610 கோடியாக உள்ளது. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு, மூலதனச் செலவுக்கு கூடுதலாக ரூ.3,000 கோடி தேவைப்படுகிறது. இந்தத் தொழிலில் 80 சதவீதம் சிறு, குறு அளவில் தொழில் செய்யும் நிறுவனங்கள். இந்த முதலீட்டைத் திரட்டுவது அவர்களுக்கு இயலாததாகும். இதன் காரணமாக, சிறு,குறு தொழில்கள் மூடும் நிலையேற்படும்.
இதைத் தவிர, தோல் பொருள் ஏற்றுமதிக்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும். ஏற்றுமதிக்கான வரி சலுகை அளிக்க வேண்டும். ஏற்றுமதிக்கான டியூட்டி டிராபேக் வரிச் சலுகை தொடர்பாக எவ்வித நிதியும் திரும்பப் பெற முடியவில்லை. எனவே, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த விதிமுறைகளையே தொடர்ந்து பின்பற்ற வேண்டும். ஏற்றுமதிக்கான விதிமுறைகள் எளிதாக இருக்க வேண்டும். ஏற்றுமதிக்கான சுங்கவரி சலுகைகளை மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். மேலும், தோல் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட 12 சதவீத வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். தோல் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபடும் ஜாப் ஒர்க்குகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். தோல் ஏற்றுமதி தொழிலில் கடந்த 3 ஆண்டுகளாக ஏற்றுமதியில் முன்னேற்றம் இல்லாமல் மந்த கதி நீடிக்கிறது. வங்கதேசம், வியத்நாம் ஆகிய நாடுகள் நமது தோல் ஏற்றுமதிக்கு போட்டியாக வளர்ந்துள்ளன. அந்த நாடுகளின் தோல் பொருள்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வங்கதேசத்தில் ஏற்றுமதிக்காக 15 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அதுபோல, மத்திய அரசு நமது தொழிலுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com