நிஸானின் 'ரெடி-கோ கோல்டு' புதிய மாடல் அறிமுகம்

நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனம் டேட்ஸன் 'ரெடி-கோ கோல்டு' என்ற புதிய மாடல் காரை செவ்வாய்க்கிழமை புது தில்லியில் அறிமுகம் செய்தது.
நிஸானின் 'ரெடி-கோ கோல்டு' புதிய மாடல் அறிமுகம்

நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனம் டேட்ஸன் 'ரெடி-கோ கோல்டு' என்ற புதிய மாடல் காரை செவ்வாய்க்கிழமை புது தில்லியில் அறிமுகம் செய்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் (சந்தைப்படுத்துதல் & டேட்சன் வர்த்தகப் பிரிவு) ஜெரோம் சாய்கோட் தெரிவித்ததாவது:
குறைந்த விலை பிரிவிலான டேட்ஸன் ரெடி-கோ கார்களுக்கு இந்திய சந்தையில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனை உணர்ந்து, ரெடி-கோ கோல்டு புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்ட இப்புதிய கார் நேர்த்தியான வடிவமைப்பு, அதிக இடவசதி கொண்டதாக உள்ளது. இது, வாடிக்கையாளர்களின் பண்டிகை கால சந்தோஷத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இதனை உற்பத்தி செய்யவுள்ளோம். ரெடி-கோ கோல்டு காரின் விலை ரூ.3.69 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள நிஸான் மற்றும் டேட்ஸன் விநியோகஸ்தர்களிடமிருந்து இப்புதிய மாடலை பெறலாம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com