என்எக்ஸ் 300ஹெச் சொகுசுக் கார்களை விநியோகிக்கத் தொடங்கியது லெக்ஸஸ்

தனது என்எக்ஸ் 300ஹெச் ரக சிறிய வகை சொகுசுக் கார்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கத் தொடங்கியுள்ளதாக லெக்ஸஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்எக்ஸ் 300ஹெச் சொகுசுக் கார்களை விநியோகிக்கத் தொடங்கியது லெக்ஸஸ்

தனது என்எக்ஸ் 300ஹெச் ரக சிறிய வகை சொகுசுக் கார்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கத் தொடங்கியுள்ளதாக லெக்ஸஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொகுசுக் கார் பிரிவான லெக்ஸக், இந்தியாவில் களமிறங்கி ஓர் ஆண்டை நிறைவு செய்வதையொட்டி அந்தக் கார்களின் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சொகுசு ரகம் மற்றும் ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு ரகம் ஆகிய இரு பிரிவுகளின் அம்சங்களையும் ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ள என்எக்ஸ் ரகக் கார்களை லெக்ஸஸ் நிறுவனம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது.
இந்தக் கார்கள் பெட்ரோல், மின்சாரம் ஆகிய இரண்டிலுமே மாறி மாறி இயங்கக் கூடிய ஹைப்ரிட் வகையைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் சொகுசு வகை ரூ.53.18 லட்சம் எனவும், ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வகை ரூ.55.58 லட்சம் எனவும் விலை அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில், என்எக்ஸ் 300ஹெச் காருக்காக முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களுக்கு தற்போது அந்தக் கார்களின் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இயக்கத்தைத் தொடங்கிய ஓர் ஆண்டிலேயே, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சிறந்த ஆதரவை வழங்கியுள்ளதாகக் கூறிய லெக்ஸஸ் இந்தியாவின் தலைவர் என். ராஜா, நாட்டில் ஹைப்ரிட் கார்களை அறிமுகப்படுத்துவதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்போவதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com