தங்கப் பத்திரம் ஏப். 16-இல் வெளியீடு

நிகழ் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் முதல் கட்ட தங்கப் பத்திர விற்பனை வரும் திங்கள்கிழமை (ஏப்.16) தொடங்குகிறது.
தங்கப் பத்திரம் ஏப். 16-இல் வெளியீடு

நிகழ் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் முதல் கட்ட தங்கப் பத்திர விற்பனை வரும் திங்கள்கிழமை (ஏப்.16) தொடங்குகிறது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் நடத்திய ஆலோசனையில் அடிப்படையில் நடப்பு 2018-19 நிதி ஆண்டுக்கான முதல் கட்ட தங்கப் பத்திரங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி, தங்கப் பத்திரங்களில் விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் திங்கள்கிழமை (ஏப்.16) ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது. தங்கப் பத்திரங்களுக்கான மத்திய அரசின் சான்றிதழ் மே 4-ஆம் தேதி முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.
வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, அஞ்சல் அலுவலகங்கள், தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் இந்த தங்கப் பத்திரங்களை வாங்கலாம் என்று நிதி அமைச்சகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் விதிமுறைகளின்படி, தனி நபர் ஒருவர் நிதியாண்டுக்கு அதிகபட்சம் 500 கிராம் வரையிலான தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இதற்கு, ஆண்டுக்கு 2.50 சதவீத வட்டி வழங்கப்படும். டிஜிட்டல் பேமண்ட் முறையை ஊக்குவிக்கும் வகையில், ஆன்லைன் மூலம் தங்கப் பத்திரங்களை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com