ஐபிஎல் போட்டியால் விறுவிறுப்படையும் ஹோட்டல் வர்த்தகம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நகரங்களில் ஹோட்டல் வர்த்தகம் விறுவிறுப்படைந்துள்ளது.
ஐபிஎல் போட்டியால் விறுவிறுப்படையும் ஹோட்டல் வர்த்தகம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நகரங்களில் ஹோட்டல் வர்த்தகம் விறுவிறுப்படைந்துள்ளது. ஹைதராபாத், மொஹாலி, கொல்கத்தா நகரங்களில் மட்டும் ஹோட்டலில் தங்குவது தொடர்பான விசாரணைக்கான அழைப்புகள் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர்.

அதேபோன்று, ஐபிஎல் சீஸன், விடுமுறை காலத்தையொட்டி விமான கட்டணங்களும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால் விமான பயண டிக்கெட்டுகளுக்கான முன்பதிவும் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது ஜெய்ப்பூருக்கான விமான கட்டணம் 13.25 சதவீதமும், தில்லி 8.35 சதவீதமும், சென்னை 6.47 சதவீதமும், ஹைதராபாத் 12.73 சதவீதமும், கொல்கத்தா மற்றும் மும்பைக்கான விமானக் கட்டணம் தலா 9.18 சதவீதமும் குறைந்துள்ளது என்கிறார் பேடிஎம் நிறுவனத்தின் அபிஷேக் ராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com