இன்டஸ்இண்ட் வங்கி லாபம் 27% உயர்வு

தனியார் துறையைச் சேர்ந்த இன்டஸ்இண்ட் வங்கியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 27 சதவீதம் அதிகரித்தது.
இன்டஸ்இண்ட் வங்கி லாபம் 27% உயர்வு

தனியார் துறையைச் சேர்ந்த இன்டஸ்இண்ட் வங்கியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 27 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வாராக் கடன் அதிகரித்துள்ள நிலையிலும் இன்டஸ்இண்ட் வங்கி சென்ற நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் ரூ.953.09 கோடி நிகர லாபம் ஈட்டியது. 2016-17 நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.751.61 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 27 சதவீதம் அதிகம். 
மொத்த வருவாய் ரூ.5,041.31 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.5,858.62 கோடியானது. குறிப்பாக, வங்கிக்கு வட்டியின்மூலமாக கிடைக்கும் வருவாய் கணிசமாக உயர்ந்தது. அதன்படி ரூ.3,830.01 கோடியாக இருந்த வட்டி வருவாய் 21.4 சதவீதம் உயர்ந்து ரூ.4,650.11 கோடியானது.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் ரூ.1,054.87 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,704.91 கோடியாகவும், நிகர வாராக் கடன் ரூ.438.91 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.745.67 கோடியாகவும் இருந்தது.
கடந்த 2017-18 முழு நிதி ஆண்டில் வங்கியின் நிகர லாபம் முந்தைய நிதி ஆண்டை விட 27 சதவீதம் அதிகரித்து ரூ.3,605.99 கோடியானது. வருவாய் ரூ.18,577.16 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.22,030.85 கோடியானது.
சென்ற நிதி ஆண்டுக்கு முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.7.50 ஈவுத்தொகை வழங்க இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக இன்டஸ்இண்ட் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com