டாப் 10 பட்டியலில் மாருதி ஆல்டோ மீண்டும் முதலிடம்

கடந்த நிதி ஆண்டில் கார் விற்பனையில் மாருதி ஆல்டோ மீண்டும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
டாப் 10 பட்டியலில் மாருதி ஆல்டோ மீண்டும் முதலிடம்

கடந்த நிதி ஆண்டில் கார் விற்பனையில் மாருதி ஆல்டோ மீண்டும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது: சென்ற 2017-18 நிதி ஆண்டில் வழக்கம்போல் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மாருதி ஆல்டோ காரையே தேர்வு செய்தனர். இதையடுத்து, பயணிகள் கார் விற்பனையில் தனது இடத்தை ஆல்டோ மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.
கடந்த நிதி ஆண்டில் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுஸுகியின் 7 மாடல்கள் இடம் பிடித்து அசத்தியுள்ளது. ஏனைய மூன்ற மாடல்கள் ஹுண்டாய் நிறுவனத்தைச் சேர்ந்தவை.
சென்ற நிதி ஆண்டில் விற்பனையான டாப் 10 கார் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆல்டோவின் விற்பனை 2,58,539-ஆக இருந்தது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6.99 சதவீதம் அதிகம். இரண்டாவது இடத்தில் மாருதி டிசையர் (1,96,990 கார்கள் விற்பனை), மூன்றாவது இடத்தில் மாருதி பலேனோ (1,90,480), நான்காவது இடத்தில் மாருதி ஸ்விஃப்ட் (1,75,928), ஐந்தாவது இடத்தில் மாருதி வேகன் ஆர் (1,68,644), ஆறாவது இடத்தில் ஹுண்டாய் கிராண்ட் 10 (1,51,113), ஏழாவது இடத்தில் மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா (1,48,462 கார்கள்) ஆகியவை உள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com