பிஎம்டபிள்யூ-வின் புதிய எக்ஸ்3 கார் அறிமுகம்

ஜெர்மனியைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம், முற்றிலும் புதிய எக்ஸ்3 காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிஎம்டபிள்யூ-வின் புதிய எக்ஸ்3 கார் அறிமுகம்

ஜெர்மனியைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம், முற்றிலும் புதிய எக்ஸ்3 காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சமதள, கரடு முரடு என எந்த சாலையானாலும் அதில் இனிமையாக பயணிக்கும் வகையில் இப்புதிய எக்ஸ்3 கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், இரண்டு லிட்டர்-நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மணிக்கு 0-100 கி.மீ வேகத்தை வெறும் 8 விநாடிகளில் அடையமுடியும். தானியங்கியாக செயல்படும் எட்டு வேக நிலைகளை இப்புதிய கார் உள்ளடக்கியுள்ளது.
பாதுகாப்பை பொருத்தவரையில் ஆறு காற்றுப் பைகள், விழிப்புணர்வு உதவி, டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட மேலும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
டீசல் காரான பிஎம்டபிள்யூ எக்ஸ் 3 இரண்டு மாடங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்பிடிஸன் மாடலின் விலை ரூ.49.99 லட்சமாகவும், லக்ஸுரி லைன் மாடலின் விலை 56.7 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய மாடல் கார் நிறுவனத்துக்குச் சொந்தமான சென்னை ஆலையிலேயே அசெம்பிள்டு செய்யப்படுகிறது. எக்ஸ்3 காரில் பெட்ரோல் மாடல் இவ்வாண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று பிஎம்டபிள்யூ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com