ரிலையன்ஸ் பவர் நிகர லாபம் 16% அதிகரிப்பு

ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 16 சதவீதம் அதிகரித்தது. 
ரிலையன்ஸ் பவர் நிகர லாபம் 16% அதிகரிப்பு

ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 16 சதவீதம் அதிகரித்தது. 
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற 2017-18 நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலமாக கிடைத்த வருவாய் ரூ.2,400.58 கோடியாக இருந்தது. 2016-17 நிதி ஆண்டில் ஈட்டிய வருவாய் ரூ.2,596.5 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறைவான அளவு.
நிகர லாபம் ரூ.215.9 கோடியிலிருந்து 16 சதவீதம் அதிகரித்து ரூ.250.47 கோடியானது.
சென்ற 2017-18 முழு நிதி ஆண்டில் நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.10,891.68 கோடியிலிருந்து சரிந்து ரூ,10,122.9 கோடியாகவும், நிகர லாபம் ரூ.1,104.16 கோடியிலிருந்து குறைந்து ரூ.1,034.81 கோடியாகவும் இருந்தது என ரிலையன்ஸ் பவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com