ஜிஎஸ்டி-யால் ஏற்றுமதி பாதிப்பு: பிஹெச்டி

ஜிஎஸ்டி ரீஃபண்டில் தாமதம் மற்றும் உயர் மதிப்பு கரன்ஸி தடைக்கு பிறகான எதிர் விளைவுகள் இந்தியாவின் ஏற்றுமதியை பாதித்துள்ளது என பிஹெச்டி சேம்பர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி ரீஃபண்டில் தாமதம் மற்றும் உயர் மதிப்பு கரன்ஸி தடைக்கு பிறகான எதிர் விளைவுகள் இந்தியாவின் ஏற்றுமதியை பாதித்துள்ளது என பிஹெச்டி சேம்பர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
 இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டில் 32,500 கோடி டாலர் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்பிற்கு மாறாக ஏற்றுமதி 10 சதவீதம் உயர்ந்து 30,280 கோடி டாலரை மட்டுமே எட்டியது.
 இதற்கு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின் விளைவுகள் மற்றும் ஐஜிஎஸ்டி ரீஃபண்டு தொகையை திரும்பத் தருவதில் ஏற்பட்டுள்ள பிரச்னை ஆகியவைதான் மிக முக்கிய காரணம். இன்னும், பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் அந்த ரீஃபண்ட்டு தொகையை திரும்ப பெறுவதற்கு போராடி வருகின்றனர்.
 இதில் ஏற்பட்டுள்ள தாமதம், ஏற்றுமதியாளர்களின் செயல்பாட்டு மூலதனத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com