அதிகரிக்கும் தேவை: சர்வதேச உருக்கு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம்

இந்தியாவில் உருக்குப் பொருள்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, எதிர்காலத்தில் அந்த தேவையை ஈடு செய்யும் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி இருக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
அதிகரிக்கும் தேவை: சர்வதேச உருக்கு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம்

இந்தியாவில் உருக்குப் பொருள்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, எதிர்காலத்தில் அந்த தேவையை ஈடு செய்யும் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி இருக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

 இதற்கு விடை காணும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தற்போது இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, உள்நாட்டில் உருக்கு உற்பத்தியை ஊக்குவிக்க வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க இந்தியா தயாராகி விட்டது.

 முன்பு வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய ஆலைகளைத் தொடங்குவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தன. ஆனால், தற்போது அந்த நிலைமை மாறி திட்டங்களை தொடங்குவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது என்கிறார் உருக்குத் துறைச் செயலர் அருணா சர்மா.

 "கடந்த கால படிப்பினைகள் மூலம் நிறைய பாடங்கள் கற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்பெல்லாம் புதிய ஆலைகளை அமைப்பதற்கு நிலம் ஒரு மிகப்பெரும் பிரச்னையாக இருந்தது; ஆனால், தற்போது அந்த நிலைமை மாறி உள்ளது'' என்கிறார் அவர்.

 ஆலைகளை அமைப்பதற்கு தேவையான நிலங்கள் அரசிடம் போதுமான அளவில் உள்ளதாகக் கூறும் அவர், இந்தியாவில் மிகப்பெரிய ஆலைகளை அமைக்க விரும்பும் சர்வதேச உருக்கு தயாரிப்பு நிறுவனங்கள் தாராளமாக இங்கே வரலாம். அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பளிக்க அரசு தயாராக உள்ளது என்கிறார்.

 அப்படி அந்த நிறுவனங்கள் இங்கே வந்து உற்பத்தியை தொடங்கும் நிலையில், இந்தியாவின் உருக்கு தயாரிப்பு திறன் வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் 15 கோடி டன்னை எட்டும் என்பது அருண் சர்மாவின் கணிப்பு. இதுவரை புதிய உருக்கு ஆலைகளை அமைக்க அனுமதி கோரி எந்தவொரு வெளிநாட்டு நிறுவனங்களும் விண்ணப்பிக்கவில்லை என்றாலும், ஏராளமான நிறுவனங்கள் நமது சந்தையை உன்னிப்பாக கவனித்து வருவதால் விரைவில் இந்தியாவில் ஆலைகளை அமைக்க அவை முன்வரலாம் என்கிறார்.

 ஏற்கெனவே, போஸ்கோ, ஆர்சிலர் மிட்டல், தைஸன்கிருப் போன்ற வெளிநாட்டு உருக்கு தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதித்துள்ளன. மதிப்பு கூட்டப்பட்ட மோட்டார் உருக்கு பொருள்கள் தயாரிப்புக்காக போஸ்கோ, தைஸன்கிருப் மகாராஷ்டிரத்தில் ஆலைகளை அமைத்துள்ள. ஆர்சிலர் மிட்டல் செயில் நிறுவனத்துடன் இணைந்து இந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com