வருமான வரி வசூலில் வரலாற்று சாதனை

நாட்டின் வருமான வரி வசூல் சென்ற நிதியாண்டில் வரலாற்று சாதனை அளவாக ரூ.10.03 லட்சம் கோடி திரட்டப்பட்டதாக மத்திய நேரடி வரிகள்
வருமான வரி வசூலில் வரலாற்று சாதனை


நாட்டின் வருமான வரி வசூல் சென்ற நிதியாண்டில் வரலாற்று சாதனை அளவாக ரூ.10.03 லட்சம் கோடி திரட்டப்பட்டதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வாரியத்தின் உறுப்பினர் ஷாப்ரி பட்டாசாலி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சென்ற 2017-18 நிதியாண்டில் வருமான வரி கணக்கு தாக்கலின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 6.92 கோடியாக இருந்தது. இது கடந்த 2016-17 நிதியாண்டின் எண்ணிக்கையான 5.61 கோடியுடன் ஒப்பிடுகையில் 1.31 கோடி அதிகம். 
மேலும், வருமான வரி வசூலைப் பொருத்தவரையில் சென்ற நிதியாண்டில் வரலாற்று சாதனை அளவாக ரூ.10.03 லட்சம் கோடி திரட்டப்பட்டுள்ளது.
2017-18-இல் வருமான வரி துறையிடம் 1.06 கோடி பேர் புதிதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். நடப்பாண்டில் இந்த எண்ணிக்கையை 1.25 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநிலங்களிலிருந்து மட்டும் 1.89 லட்சம் பேர் வருமான வரித் துறையிடம் புதிதாக கணக்கு தாக்கலை செய்துள்ளனர். மேலும், அந்த மண்டலங்களிலிருந்து சென்ற நிதியாண்டில் ரூ.7,097 கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 2016-17-ஆம் ஆண்டின் வசூலான ரூ.6,082 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 16.7 சதவீதம் அதிகமாகும்.
இம்மாநிலங்களில் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 17.75 சதவீதம் அதிகமாக அதாவது ரூ.8,357 கோடி வருமான வரி வசூலிக்க நேரடி வரிகள் வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com