அந்நியச் செலாவணி கையிருப்பு 2,514 கோடி டாலர் சரிவு

கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரையிலான இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2,514.8 கோடி டாலர் (சுமார் ரூ.1.70 லட்சம் கோடி) வீழ்ச்சியடைந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி, அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்று சாதனை அளவாக ஏப்ரல் 13-ஆம் தேதி வாரத்தில் 42,602.8 கோடி டாலராக காணப்பட்டது. இது ஆகஸ்ட் 10-ஆம் தேதி வாரத்தில் 40,088 கோடி டாலராக சரிவைக் கண்டுள்ளது. ஆக, இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் அந்நியச் செலாவணி கையிருப்பானது 2,514.8 கோடி டாலர் அளவுக்கு குறைந்துள்ளது. மிகவும் அதிகபட்சமாக ஒரு வாரத்தில் 182.2 கோடி டாலர் வரைக்கும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இவ்வாண்டு தொடக்கம் முதல் ரூபாய் மதிப்பில் காணப்பட்டு வரும் சரிவு நிலையால் உள்ளூர் கரன்ஸியை பாதுகாக்கும் வகையில் ரிசர்வ் வங்கி அதிக டாலர்களை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டது. இதுவே, அந்நியச் செலாவணி பெருமளவு குறைந்து போனதற்கு முக்கிய காரணமாகும்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com