வட்டி விகிதம்: ரிசர்வ் வங்கி குழு கூட்டம் தொடக்கம்

வட்டி விகிதங்கள் நிர்ணயம் தொடர்பாக மூன்று நாள்கள் நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.


வட்டி விகிதங்கள் நிர்ணயம் தொடர்பாக மூன்று நாள்கள் நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
மிதமான பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் குறைந்துள்ளது ஆகியவற்றை கருத்தில் கொண்டு வங்கிகளுக்கான வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி மாற்றம் எதையும் மேற்கொள்ளாது; பழைய நிலையே தொடரும் என்று பொருளாதார நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இரு மாதங்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்படும் வங்கிகளின் வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) தொடர்பாக நடைபெறும் 3 நாள் கூட்டம் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் எடுக்கப்படும் முடிவுகள் டிசம்பர் 5-ஆம் தேதி பிற்பகலில் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com