ஐபிஎம் மென்பொருள் தயாரிப்புகளை கையகப்படுத்துகிறது ஹெச்சிஎல்

ஐபிஎம் நிறுவனத்தின் மென்பொருள் தயாரிப்புகளை கையகப்படுத்தவுள்ளதாக இந்தியாவைச் சேர்ந்த ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. 
ஐபிஎம் மென்பொருள் தயாரிப்புகளை கையகப்படுத்துகிறது ஹெச்சிஎல்


ஐபிஎம் நிறுவனத்தின் மென்பொருள் தயாரிப்புகளை கையகப்படுத்தவுள்ளதாக இந்தியாவைச் சேர்ந்த ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. 
இதுகுறித்து ஹெச்சிஎல் நிறுவனம் செபி-க்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பாதுகாப்பு, சந்தைப்படுத்துதல், ஒருங்கிணைந்த தீர்வுகள் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபிஎம் நிறுவனத்தின் மென்பொருள் தயாரிப்புகளை கையகப்படுத்தும் வகையில் ஐபிஎம் மற்றும் ஹெச்சிஎல் இடையே இறுதிகட்ட உடன்பாடு வெள்ளிக்கிழமை எட்டப்பட்டுள்ளது.
இந்த கையகப்படுத்துதலின் மதிப்பு ரூ.12,700 கோடியாகும் (180 கோடி டாலர்) என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஒழுங்காற்று அமைப்புகளின் ஒப்புதலைப் பெற்று வரும் 2019- ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை முடிவுக்கு வரும் என்று ஹெச்சிஎல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com