என்டார்க் 125 புதிய ரக ஸ்கூட்டர்: டிவிஎஸ் அறிமுகம்

புதிய ஸ்டைல், செயல்திறன் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய டிவிஎஸ் என்டார்க் 125 என்ற முதல் 125 சிசி ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார் அறிமுகம் செய்துள்ளது.
என்டார்க் 125 புதிய ரக ஸ்கூட்டர்: டிவிஎஸ் அறிமுகம்

புதிய ஸ்டைல், செயல்திறன் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய டிவிஎஸ் என்டார்க் 125 என்ற முதல் 125 சிசி ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார் அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கே.என். ராதாகிருஷ்ணன் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைத்துப் பேசியது: இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கு கிடைத்திருக்கும் பிரம்மாண்டமான ஆதரவும், வரவேற்பும் புதிய மாடல்களை உருவாக்க எங்களை ஊக்குவிக்கிறது. முதல் முறையாக 125 சிசி திறனுள்ள இரு சக்கர வாகனத்தை டிவிஎஸ் உருவாக்கியுள்ளது. டிஸ்க் பிரேக், செயலி மூலம் இயக்கும் வசதி, டியூப் இல்லா டயர், புளூடூத் வசதி, என்ஜினை ஆஃப் செய்ய தனி சுவிட்ச் உள்ளிட்ட நவீன வசதிகள் இதில் உள்ளன. நான்கு வண்ணங்களில் அறிமுகமாகிறது. இளம் வாடிக்கையாளர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் நல்ல வரவேற்பைப் பெறும் என நம்புகிறோம் என்றார் அவர். டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரின் விற்பனையக விலை ரூ. 58,750-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com