விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கு ரூ.15,000 கோடி முதலீடு: ஏஏஐ

உள்நாட்டில் புதிய விமான நிலையத்தை கட்டமைக்கவும், விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ளவும் வரும் நிதி ஆண்டில் ரூ.15,000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (ஏஏஐ) தெரிவித்துள்ளது
விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கு ரூ.15,000 கோடி முதலீடு: ஏஏஐ

உள்நாட்டில் புதிய விமான நிலையத்தை கட்டமைக்கவும், விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ளவும் வரும் நிதி ஆண்டில் ரூ.15,000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (ஏஏஐ) தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து ஏஏஐ தலைவர் குருபிரசாத் மஹபத்ரா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதிலும் உள்ள விமான முனையங்களின் கட்டடங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, வரும் 2018-19-ஆம் நிதி ஆண்டில் ரூ.15,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. 
குறிப்பாக, அடுத்த நிதி ஆண்டில் 15 விமான முனைய கட்டடங்களை கூடுதல் வசதிகளுடன் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் பக்யோங் என்ற இடத்தில் ரூ.650 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த புதிய விமான நிலையப் பணிகள் முடிவடைந்துள்ளன. அதனுடன், அருணாசல பிரதேசத்தின் டெஸý விமானநிலைய பணிகளும் நிறைவுபெற்றுள்ளன. இந்த இரு விமான நிலையங்களும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
மேற்கு ஒடிஸாவில் ரூ.200 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டு வந்த ஜர்சுகுடா விமான நிலையத்தின் பணிகள் முழுமையடைந்துள்ளன.அதனை வரும் ஏப்ரல் மாதத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று, நவி மும்பை விமான நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டும் பணி விரைவில் நடைபெறவுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் ஜீவர் என்ற இடத்தில் மற்றொரு விமான நிலையத்தை கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. 
கோவாவில் மோபா என்ற இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலும் புதிய விமான நிலையத்தை அமைக்கும் திட்டமும் உள்ளது. 
மேலும், மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவிலும் மற்றும் தமிழகத்தில் சென்னையிலும் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com