வட்டி மானியத்தை 5 சதவீதமாக அதிகரிக்க கைவினைப் பொருள் ஏற்றுமதி கவுன்சில் கோரிக்கை

வட்டி மானியத்தை 5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இபிசிஹெச்) கோரிக்கை விடுத்துள்ளது.
வட்டி மானியத்தை 5 சதவீதமாக அதிகரிக்க கைவினைப் பொருள் ஏற்றுமதி கவுன்சில் கோரிக்கை

வட்டி மானியத்தை 5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இபிசிஹெச்) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த கவுன்சிலின் தலைவர் கூறியுள்ளதாவது:
கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள் கடும் நிதி நெருக்கடியிலில் சிக்கி தவித்து வருகின்றனர். மத்திய அரசு, அவர்களுக்கு ரூ.3,500 கோடி வரையில் வரி பாக்கியை திருப்பித் தர வேண்டியுள்ளது. உற்பத்தியாளர்களின் நெருக்கடி நிலையை உணர்ந்து வழங்கப்பட வேண்டிய வரி பாக்கியை உடனடியாக திரும்பத் தர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி பாக்கியை திரும்பத்தர கால நிர்ணயம் செய்யாதது இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை வெகுவாக பாதித்துள்ளது.
கைவினைப் பொருள் ஏற்றுமதியாளர்கள் சிறிய முதலீட்டில் தங்களது வர்த்தகத்தை நடத்தி வருகின்றனர். வட்டி விகிதங்கள் அதிகமாக உள்ளதால், அவர்கள் வங்கிகளிடமிருந்தும் கடன்பெற இயலாத நிலை உள்ளது. அரசு இதனை உணர்ந்து, வட்டி மானியத்தை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
வரிபாக்கி திரும்பக் கிடைக்காத இந்த இக்கட்டான சூழ்நிலை நடப்பு நிதி ஆண்டில் கைவினைப் பொருள்களின் ஏற்றுமதியில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியில் இது தாக்கத்தை உண்டாக்கும். மேலும், உலக அளவில் தேவை குறைந்து காணப்படுவதால் நடப்பு 2017-18 நிதி ஆண்டில் கைவினைப் பொருள்களின் ஏற்றுமதி 3.5 சதவீதம் குறையும் என்றார் அவர்.
கடந்த 2016-17 நிதி ஆண்டில் கைவினைப் பொருள்களின் ஏற்றுமதி ரூ.24,500 கோடியாக இருந்தது. இத்துறையின் மூலம், உள்நாட்டில் 70 லட்சம் பேர் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
ஒட்டுமொத்த கைவினைப் பொருள்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com