கச்சா எண்ணெய் சந்தை சமநிலை பெறும்: ஒபெக்

நடப்பு ஆண்டில் உலக அளவில் கச்சா எண்ணெய் சந்தை சமநிலை பெறும் என கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் சந்தை சமநிலை பெறும்: ஒபெக்

நடப்பு ஆண்டில் உலக அளவில் கச்சா எண்ணெய் சந்தை சமநிலை பெறும் என கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்மைப்பின் தலைவர் சுஹைல் அல்-மஸ்ரூய் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சந்தையில் தேவை மற்றும் உற்பத்தி ஆகியவற்றுக்கிடையே அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலை நடப்பு ஆண்டில் மாறிவிடும். 2018-இல் கச்சா எண்ணெய் சந்தையைப் பொருத்தவரையில் உற்பத்தி மற்றும் அளிப்பில் சமநிலை பெற்றுவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த 2014-இல் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்து அதன் விலை வீழ்ச்சியடைந்ததன் தொடர்ச்சியாக, 2016-இல் நாள் ஒன்றுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தியை 18 லட்சம் பீப்பாய்கள் குறைப்பதென முடிவெடுக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த முடிவுக்கு, அனைத்து நாடுகளும் ஆதரவளித்தன. இதையடுத்து, வீழ்ச்சி கண்ட கச்சா எண்ணெய்விலை பீப்பாய்க்கு 70 டாலர் என்ற அளவுக்கு மீண்டுள்ளது.
கச்சா எண்ணெய் சந்தை சமநிலைக்கு திரும்பும் என்ற போதிலும், அதற்கான தேவை உலக நாடுகளிடையே பெருமளவு அதிகரித்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எரிசக்தி துறையின் உற்பத்தியை தேவைக்கேற்ப அதிகரிக்க வேண்டுமெனில் எதிர்காலத்தில் அதற்கேற்ப அதிக அளவில் முதலீடு மேற்கொள்ள ஆயத்தமாக வேண்டும். இது வளைகுடா நாடுகளுக்கு மட்டுமின்றி, சர்வதேச எண்ணெய் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
வரும் 2040-ஆம் ஆண்டில் ஏற்படும் தேவையை ஈடு செய்ய நாம் நாள் ஒன்றுக்கு 1.5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு, 10.5 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவைப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com