முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி

மாருதி சுஸுகி, ஹோண்டாகார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை சென்ற டிசம்பரில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.
முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி

மாருதி சுஸுகி, ஹோண்டாகார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை சென்ற டிசம்பரில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.
 மாருதி சுஸுகி கார் விற்பனை 10.3% வளர்ச்சி: நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா சென்ற டிசம்பர் மாதத்தில் 1,30,066 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த 2016 டிசம்பரில் விற்பனையான 1,17,908 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 10.3 சதவீத வளர்ச்சியாகும்.
 உள்நாட்டில் கார் விற்பனை 12.1 சதவீதம் அதிகரித்து 1,19,286ஆக காணப்பட்டது. கார்கள் ஏற்றுமதியும் 6.2 சதவீதம் சரிந்து 10,780ஆக குறைந்து போனதாக மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 ஹோண்டா கார்ஸ் விற்பனை 26% அதிகரிப்பு: ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் சென்ற டிசம்பரில் 12,642 கார்களை விற்பனை செய்துள்ளது. 2016 டிசம்பர் மாத விற்பனையான 10,071என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் அதிகமாகும்.
 சென்ற 2017ஆம் ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாத காலத்தில் கார் விற்பனை 15 சதவீதம் வளர்ச்சி கண்டு 1,56,107லிருந்து 1,78,755ஆக அதிகரித்துள்ளது.
 குறிப்பாக, ஹோண்டா சிட்டி மற்றும் டபிள்யூஆர்-வி மாடல்களுக்கான தேவை சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது என அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான யோஷிரோ யுனோ தெரிவித்தார்.
 ஹுண்டாய் கார் விற்பனை 10% உயர்வு: ஹுண்டாய் மோட்டார் இந்தியா டிசம்பர் மாதத்தில் 62,899 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற 2016 டிசம்பர் மாத விற்பனையான 57,164 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம்.
 உள்நாட்டில் கார்கள் விற்பனை 40,057லிருந்து 40,158ஆக உயர்ந்தது. கார்கள் ஏற்றுமதி 17,107 என்ற எண்ணிக்கையிலிருந்து 32.9 சதவீதம் வளர்ச்சி கண்டு 22,741ஆனது என ஹுண்டாய் மோட்டார் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 மஹிந்திரா வாகன விற்பனை 8% வளர்ச்சி: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சென்ற டிசம்பரில் 39,200 வாகனங்களை விற்பனை செய்தது. 2016 டிசம்பர் மாத விற்பனையான 36,464 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 8 சதவீத வளர்ச்சியாகும்.
 உள்நாட்டில் கார் விற்பனை 7 சதவீதம் அதிகரித்து 36,979ஆக இருந்தது. ஏற்றுமதி 8 சதவீதம் வளர்ச்சியடைந்து 2,221ஆக காணப்பட்டது.
 ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யுவி500, பொலேரோ, வெரிட்டோ உள்ளிட்ட பயணிகள் வாகன விற்பனை 16,799லிருந்து 7 சதவீதம் சரிந்து 15,543ஆனது. அதேசமயம், வர்த்தக வாகனங்கள் விற்பனை 24 சதவீதம் அதிகரித்து 17,542ஆனது என மஹிந்திரா & மஹிந்திரா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 டிவிஎஸ் வாகன விற்பனை 39% அதிகரிப்பு: இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை டிசம்பரில் 39 சதவீதம் அதிகரித்து 2,56,909ஆக இருந்தது. கடந்த 2016 டிசம்பரில் வாகன விற்பனை 1,84,944ஆக காணப்பட்டது என அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com