மின் சைக்கிள்களை அறிமுகப்படுத்துவதில் ஹீரோ நிறுவனம் தீவிரம்

மிதிவண்டி தயாரிப்பு நிறுவனமான ஹீரோ சைக்கிள்ஸ், பேட்டரியில் இயங்கும் மின் சைக்கிள்களை (இ-சைக்கிள்) அறிமுகப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 
மின் சைக்கிள்களை அறிமுகப்படுத்துவதில் ஹீரோ நிறுவனம் தீவிரம்

மிதிவண்டி தயாரிப்பு நிறுவனமான ஹீரோ சைக்கிள்ஸ், பேட்டரியில் இயங்கும் மின் சைக்கிள்களை (இ-சைக்கிள்) அறிமுகப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2017-18ஆம் நிதி ஆண்டின் இறுதிக்குள் 20 மின் சைக்கிள்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மின் சைக்கிள்களில் பொருத்தப்படும் பேட்டரியை 2ஏ சார்ஜரை கொண்டு 4-5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஏற்றலாம். பேட்டரியை ஒரு முறை சார்ஜ் ஏற்றுவதன் மூலமாக மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் 50 கிலோமீட்டர் வரை செல்லலாம். 
நிறுவனம் தற்போது மின் பெடல் உதவியுடன் இயங்கும் இ.பி.ஏ.சி. ரக மிதிவண்டிகளை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இதன் விலை மாடல்களுக்கு ஏற்ப ரூ.45,000 முதல் ரூ.89,000 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இ-சைக்கிள்களை தயாரிக்க சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என ஹீரோ சைக்கிள்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த அவோசெட் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம் 'லெட்ரோ' சைக்கிள்களை ஐரோப்பிய நாடுகளில் ஹீரோ அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் இந்த சைக்கிள்கள் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com