வென்ட் இந்தியா லாபம் 23% உயர்வு

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த வென்ட் இந்தியா நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு லாபம் 23 சதவீதம் அதிகரித்தது.
வென்ட் இந்தியா லாபம் 23% உயர்வு

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த வென்ட் இந்தியா நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு லாபம் 23 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வென்ட் இந்தியா நிறுவனம் டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் விற்பனையின் வாயிலாக ரூ.31.12 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விற்பனை வருவாய் சரிந்துள்ளது. உள்நாட்டில் விற்பனையின் மூலமாக ஈட்டக் கூடிய வருவாயும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 14 சதவீதம் குறைந்து ரூ.20.88 கோடியாக இருந்தது. அதேசமயம், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, தைவான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் தேவை சூடுபிடித்ததையடுத்து நிறுவனத்தின் ஏற்றுமதி 28 சதவீதம் உயர்ந்து ரூ.10.24 கோடியானது. 
வரிக்கு பிந்தைய லாபம் 23 சதவீதம் அதிகரித்து ரூ.2.70 கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்தில் மொத்த விற்பனை ரூ.91.63 கோடியை எட்டியுள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் 17 சதவீதம் குறைந்து ரூ.6.58 கோடியாக காணப்பட்டது.
ஒட்டுமொத்த அளவில் மூன்றாவது காலாண்டில் விற்பனை ரூ.35.94 கோடியாகவும், நிகர லாபம் 3.30 கோடியாகவும் இருந்தது. ஒன்பது மாத கால அளவில் விற்பனை ரூ.105.41 கோடியாகவும், லாபம் 13 சதவீதம் சரிந்து ரூ.8.23 கோடியாகவும் இருந்தது.
இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.10 வழங்க முடிவெடுக்கப்பட்டது என்று வென்ட் இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com