28 மாதங்களில் 3 லட்சத்தை தாண்டிய மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா கார் விற்பனை

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் விட்டாரா ப்ரெஸ்ஸா கார் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்ட 28 மாதங்களில் 3 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. 

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
விட்டாரா ப்ரெஸ்ஸா கார் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், வெறும் 28 மாதங்களில் அதன் விற்பனை 3 லட்சம் என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக விட்டாரா ப்ரெஸ்ஸா கார்களின் விற்பனை எண்ணிக்கை மாதம் ஒன்றுக்கு 12,600 என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 25 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
சொகுசுக் கார் விற்பனையில் ப்ரெஸ்ஸா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உயர்வகை மாடல் கார் மொத்த விற்பனையில் ப்ரெஸ்ஸா பங்களிப்பு 56 சதவீதமாக உள்ளது என்று மாருதி சுஸுகி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com