டிசிஎஸ் லாபம் ரூ.7,340 கோடி

நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ள டிசிஎஸ் (டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்) முதல் காலாண்டில் ரூ.7,340 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ள டிசிஎஸ் (டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்) முதல் காலாண்டில் ரூ.7,340 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளதாவது: டிஜிட்டல் சேவைக்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்ததையடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு நிதி நிலை முடிவு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. 
நிறுவனத்தின் வங்கி சார்பான சேவை இக்காலாண்டில் சிறப்பாக மேம்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் செயல்பாடுகள் மூலமான வருவாய் 15.8 சதவீதம் அதிகரித்து ரூ.34,261 கோடியாக இருந்தது. கடந்த 2017-18 நிதி ஆண்டில் இதே கால அளவில் வருவாய் ரூ.29,584 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.5,945 கோடியிலிருந்து 23.4 சதவீதம் உயர்ந்து ரூ.7,340 கோடியானது. ரூ.1 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.4 அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com