டாப் 10 கார் விற்பனை: ஆல்டோவை விஞ்சிய டிசையர், ஸ்விஃப்ட்

ஜூன் மாதத்தில் விற்பனையான டாப் 10 கார்களில் ஆல்டோவை விஞ்சி டிசையர், ஸ்விஃப்ட் ரக கார்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
டாப் 10 கார் விற்பனை: ஆல்டோவை விஞ்சிய டிசையர், ஸ்விஃப்ட்

ஜூன் மாதத்தில் விற்பனையான டாப் 10 கார்களில் ஆல்டோவை விஞ்சி டிசையர், ஸ்விஃப்ட் ரக கார்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது;
விற்பனையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்த ஆல்டோவை ஜூன் மாதத்தில் டிசையர், ஸ்விஃப்ட் ரக கார்கள் பின்னுக்குத் தள்ளியுள்ளன. அம்மாதத்தில் விற்பனையான டாப் 10 கார்களில் ஆறு மாடல்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தையும், மூன்று ஹுண்டாய் நிறுவனத்தையும், ஒன்று ஹோண்டா நிறுவனத்தையும் சேர்ந்தவை.
கடந்த ஆண்டு ஜூனில் 12,050-ஆக இருந்த டிசையர் கார் விற்பனை சென்ற ஜூன் மாதத்தில் 18,758 என்ற எண்ணிக்கையை தொட்டதையடுத்து அந்த கார் முதலிடத்தைப் பிடித்தது. ஸ்விஃப்ட் ரக கார்கள் 18,171 விற்பனையாகி இரண்டாவது இடத்தையும், ஆல்டோ மாடலில் 18,070 கார்கள் விற்பனையாகி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
இவற்றைத் தொடர்ந்து விற்பனையில், பலேனோ (17,850) நான்காவது இடத்தையும், வேகன் ஆர் (11,311) ஐந்தாவது இடத்தையும், எலைட் ஐ20 (11,262) ஆறாவது இடத்தையும், கிரெட்டா (11,111) ஏழாவது இடத்தையும், ப்ரெஸ்ஸா (10,713) எட்டாவது இடத்தையும் பிடித்தன.
மேலும், ஹுண்டாயின் கிராண்ட் ஐ10 (10,343), ஹோண்டாவின் அமேஸ் (9,103) மாடல்கள் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்துள்ளதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com