இந்தியாவில் ஹுண்டாய் கார்கள் உற்பத்தி 80 லட்சத்தை கடந்து சாதனை

இந்தியாவில் 20 ஆண்டுகளில் ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கார் உற்பத்தி 80 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் ஹுண்டாய் கார்கள் உற்பத்தி 80 லட்சத்தை கடந்து சாதனை

இந்தியாவில் 20 ஆண்டுகளில் ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கார் உற்பத்தி 80 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஒய்கே கூ தெரிவித்ததாவது:
இந்தியாவில் உற்பத்தியை தொடங்கிய 19 ஆண்டுகள் ஆறு மாதங்களில் இந்த இமாலய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 20 ஆண்டுகளில் ஹுண்டாய் 80 லட்சம் கார்களை உற்பத்தி செய்து அசத்தியுள்ளது. கிரெட்டா எஸ்யுவி காரை உற்பத்தி செய்ததன் மூலம் இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டில் 10 லட்சம் கார்கள் என்ற சாதனை சாத்தியமாகியது. சென்னை ஆலையை 535 ஏக்கரில் விரிவாக்கம் செய்ததற்குப் பிறகு 40 லட்சம் கார்கள் என்ற மைல்கல்லை 2012-இல் ஹுண்டாய் கடந்தது. 
ஆலை அமைத்து உற்பத்தியை தொடங்கிய நாள் முதல் இதுவரையில் நிறுவனம் 53,00,967 கார்களை இந்திய சந்தைகளிலும், 27,03,581 கார்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளது.
வரும் 2021-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்துக்குள் 1 கோடி கார்களை உற்பத்தி செய்வதே எங்களின் இலக்கு என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com