வரோக் என்ஜினியரிங் புதிய பங்கு வெளியீடு ஜூன் 26-இல் தொடக்கம்

வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வரோக் என்ஜினியரிங் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு ஜூன் 26-ஆம் தேதி தொடங்குகிறது.
வரோக் என்ஜினியரிங் புதிய பங்கு வெளியீடு ஜூன் 26-இல் தொடக்கம்

வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வரோக் என்ஜினியரிங் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு ஜூன் 26-ஆம் தேதி தொடங்குகிறது.
ஒளரங்காபாத்தைச் சேர்ந்த வரோக் என்ஜினியரிங் கடந்த 1990-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம், உலகம் முழுவதிலும் உள்ள மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தேவையான மின்சார-மின்னணு சாதனங்கள், வெளிப்புற விளக்கு அமைப்புகள், சேஷிஸ் உள்ளிட்ட பல முக்கிய உதிரிபாகங்களை தயாரித்து அளித்து வருகிறது.
வரோக் என்ஜினியரிங் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டும் வகையில் புதிய பங்கு வெளியீடை மேற்கொள்ள செபி அமைப்பிடம் அனுமதி பெற்றிருந்தது. இந்த நிலையில், இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு வரும் ஜூன் 26-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. 
இந்த வெளியீட்டின்போது, மேம்பாட்டாளர்கள் மற்றும் தற்போதைய முதலீட்டாளர்களின் 2,02,21,730 பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. பங்கு ஒன்றின் குறைந்தபட்ச விலை ரூ.965-ஆகவும், அதிகபட்ச விலை ரூ.967 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிறுவனம் இப்பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.1,955 கோடியை திரட்டிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணியாளர்களுக்காக 1 லட்சம் பங்குகள் சலுகை விலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பங்கு ஒன்றுக்கு ரூ.48 தள்ளுபடி சலுகை வழங்கப்படும். 
கோட்டக் மஹிந்திரா கேப்பிட்டல், சிட்டிகுரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இந்தியா, கிரெடிட் சுஸி செக்யூரிட்டீஸ், ஐஐஎஃப்எல் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இப்புதிய பங்கு வெளியீட்டை நிர்வகிக்க உள்ளதாக வரோக் என்ஜினியரிங் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com