50 வர்த்தக வாகனங்களை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டம்

நடப்பு நிதி ஆண்டில் 50 வர்த்தக வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. 
50 வர்த்தக வாகனங்களை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டம்

நடப்பு நிதி ஆண்டில் 50 வர்த்தக வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் (வர்த்தக வாகனங்கள் பிரிவு) கிரிஷ் வாக் தெரிவித்தது:
வர்த்தக வாகன பிரிவில் நிறுவனத்தின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் நடப்பு நிதி ஆண்டில் 50 வர்த்தக வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும், வர்த்தக வாகன தயாரிப்புக்காக ரூ.1,500 கோடியை முதலீடு செய்யவுள்ளோம். வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே சுற்றுப்புறச் சுழலுக்கு உகந்த பிஎஸ் 4 தொழில்நுட்பத்தில் வாகனங்களை உருவாக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் அந்த தொகை பயன்படுத்திக் கொள்ளப்படும்.
கடந்த நிதி ஆண்டில் 50-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. நடப்பு நிதி ஆண்டிலும் அதே அளவுக்கு புதிய வாகனங்களை அறிமுகம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
வர்த்தக மற்றும் பயணிகள் வாகன பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கையை அடுத்து கடந்த 2017-18 நிதி ஆண்டில் ரூ.1,900 கோடி வரை மிச்சப்படுத்தப்பட்டது. நடப்பு நிதி ஆண்டிலும் அதே அளவிலான தொகையை சேமிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதற்கேற்ற வகையில் எதிர்காலத்தில் வாகனங்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துவோம் என்றார் அவர்.
வர்த்தக வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸின் பங்களிப்பு கணிசமான அளவுக்கு அதிகரித்து வருகிறது.
அதன்படி உள்நாட்டு வர்த்தக வாகன சந்தையில் கடந்த 2016-17 இல் 44.4 சதவீதமாக காணப்பட்ட இந்நிறுவனத்தின் பங்களிப்பு கடந்த நிதி ஆண்டில் 45.1 சதவீதமாக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com