சென்செக்ஸ் 137 புள்ளிகள் சரிவு

முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.
சென்செக்ஸ் 137 புள்ளிகள் சரிவு

முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.
பொருளாதார புள்ளிவிவரம் சாதகமாக இருந்தபோதிலும் நிதி பற்றாக்குறை அதிகரிப்பு குறித்து முதலீட்டாளர்களிடம் எழுந்த கவலை, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் என்ற நிலைப்பாட்டால் சர்வதேச அளவில் காணப்பட்ட லாப நோக்கிலான பங்கு பரிவர்த்தனை ஆகியவை பங்குச் சந்தைகளில் பின்னடைவை ஏற்படுத்தின.
பொதுத் துறை வங்கிகளின் நிதி மோசடி ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வருவதையடுத்து, அத்துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்பனை செய்தனர். இதையடுத்து அத்துறையைச் சேர்ந்த குறியீட்டெண் 0.85 சதவீதம் சரிந்தது. உலோகம், நுகர்வோர் சாதனங்கள், மருந்து, தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின. 
சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள தனியார் துறையைச் சேர்ந்த ஐசிஐசிஐ பங்கின் விலை அதிகபட்சமாக 2.63 சதவீதமும், பொதுத் துறையைச் சேர்ந்த எஸ்பிஐ பங்கின் விலை 2.31 சதவீதமும் சரிவடைந்தன.
இவை தவிர, இன்ஃபோசிஸ், பவர் கிரிட், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலையும் 1.19 சதவீத அளவுக்கு குறைந்தன.
அதேசமயம், கோல் இந்தியா, இன்டஸ்இண்ட் வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், மஹிந்திரா, கோட்டக் வங்கி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 137 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 34,046 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 34 புள்ளிகள் குறைந்து 10,458 புள்ளிகளாக நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com