உருக்குப் பொருளுக்கான தேவை அதிகரிப்பு தொழில் துறைக்கு சாதகம்: 'இக்ரா'

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் உருக்கு பொருள்களுக்கான தேவை 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, தொழில் துறைக்கு சாதகமான அம்சமாகும் என தர மதிப்பீட்டு நிறுவனமான 'இக்ரா' தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடப்பு 2017-18-ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில் உள்நாட்டில் உருக்கு பொருள்களுக்கான தேவை கடந்த ஆண்டைக் காட்டிலும் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, மோட்டார் வாகன துறை மற்றும் பொறியியல் சாதன தயாரிப்பு துறைகள் சுணக்க நிலையிலிருந்து மீண்டு வருவதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
உள்கட்டமைப்பு துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அரசு நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை விரைவுபடுத்தி வருவதையடுத்து உள்நாட்டு நுகர்வு வளர்ச்சியில் சாதகமான சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குறைந்த விலையில் வீடு கட்டும் திட்டம், எரிசக்தி பரிமாற்ற பிரிவு வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துவது மிகுந்த பலனளிக்கும்.
உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளில் உள்ளூர் தேவை அதிகரிப்பு, இறக்குமதிகளில் குறைந்த வளர்ச்சி உள்ளிட்ட சாதகமான காரணிகளின் கலவை, வரும் காலத்தில் இத்துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என இக்ரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com