ரூ.1.49 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய 'மொஜோ' பைக்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ரூ.1.49 லட்சத்தில் 'மொஜோ' என்ற புதிய வகை ஸ்போர்ட்ஸ் பைக்கை திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.
ரூ.1.49 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய 'மொஜோ' பைக்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ரூ.1.49 லட்சத்தில் 'மொஜோ' என்ற புதிய வகை ஸ்போர்ட்ஸ் பைக்கை திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இருசக்கர வர்த்தகப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி பிரகாஷ் வகான்கர் தெரிவித்துள்ளதாவது:
அதி நவீன தொழில்நுட்பத்தில் புதிய தயாரிப்புகளை விரும்பும் இன்றைய இளைய தலைமுறையினரின் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் 'மொஜோ யுடி300' பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வகையான சாலைகளிலும் சொகுசான பயணத்தை மேற்கொள்ள ஏதுவான வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இப்புதிய பைக்கில் 300 சிசி திறன் கொண்ட லிக்யுட் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதுடன், டிஜிட்டல் பேனல், கார்பரேட்டர் ஃபியூல் சிஸ்டம், 17 அங்குல டியூப்லஸ் டயர்கள், 21-லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இப்புதிய பைக்கின் விலை ரூ.1.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இந்த மாதத்தில் முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்ளுக்கும் ரூ.10,000 மதிப்பிலான அறிமுகச் சலுகை வழங்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com