சென்செக்ஸ் 429 புள்ளிகள் வீழ்ச்சி

வங்கிகளின் மோசடி விவகாரம் நாளுக்குள் நாள் விஸ்வரூபமெடுத்து வருவதால் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 5-வது நாளாக செவ்வாய்க்கிழமை வர்த்தகம் சரிவை சந்தித்தது. 

வங்கிகளின் மோசடி விவகாரம் நாளுக்குள் நாள் விஸ்வரூபமெடுத்து வருவதால் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 5-வது நாளாக செவ்வாய்க்கிழமை வர்த்தகம் சரிவை சந்தித்தது. 
தொடக்கத்தில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்ட நிலையில், மெஹுல் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.5,000 கோடி கூடுதலாக கடன் வழங்கியது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கி தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் ஆக்சிஸ் வங்கி தலைமைச் செயல் அதிகாரி ஷிக்கா சர்மா ஆகியோருக்கு தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (எஸ்ஐஎஃப்ஓ) சம்மன் அனுப்பியது பங்குச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மேலும், வாராக் கடன் விதிமுறைகளை மீறியது தொடர்பாக ஆக்ஸிஸ் வங்கிக்கு ரூ.3 கோடியும், கேஒய்சி விதிமீறல் தொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.2 கோடியும் ரிசர்வ் வங்கி அபராதம் விதித்ததன் எதிரொலியாலும் வங்கித் துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்பனை செய்தனர். இதன் காரணமாக, வங்கிகளின் பங்குகள் விலை 2.77 சதவீதம் வரை சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 429 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 33,317 புள்ளிகளில் நிலைத்தது. கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் மட்டும் சென்செக்ஸ் 1,129 புள்ளிகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 109 புள்ளிகள் சரிந்து 10,249 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com