ரூ.2,500 கோடி பங்கு வெளியீடு: பந்தன் வங்கிக்கு செபி அனுமதி

தனியார் துறையைச் சேர்ந்த பந்தன் வங்கி, பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்கி ரூ.2,500 கோடி திரட்டுவதற்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான 'செபி' அனுமதி அளித்துள்ளது.
ரூ.2,500 கோடி பங்கு வெளியீடு: பந்தன் வங்கிக்கு செபி அனுமதி

தனியார் துறையைச் சேர்ந்த பந்தன் வங்கி, பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்கி ரூ.2,500 கோடி திரட்டுவதற்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான 'செபி' அனுமதி அளித்துள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த பந்தன் வங்கி பொதுப் பங்கு வெளியீட்டு அனுமதி கோரி செபியிடம் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி விண்ணப்பித்தது. தற்போது அதற்கான அனுமதியை செபி வழங்கியுள்ளது. எந்தவொரு நிறுவனமும் புதிய பங்கு வெளியீடு மற்றும் உரிமைப் பங்கு வெளியீடு மேற்கொள்ள செபியின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பந்தன் வங்கி புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 9,76,63,910 பங்குகளை விற்பனை செய்யவுள்ளது. மேலும், கோரிக்கை அடிப்படையில், ஐஎஃப்டி (இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்) நிறுவனத்தின் 1,40,50,780பங்குகள் வரையிலும், ஐஎஃப்சி எப்ஐஜி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் 75,65,804 பங்குகள் வரையிலும் விற்பனை செய்ய அந்த வங்கி திட்டமிட்டுள்ளது. பங்கு வெளியீடு மூலம், பந்தன் வங்கி ரூ.2,500 கோடி வரை திரட்ட திட்டமிட்டுள்ளதாக வணிக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுப் பங்கு வெளியீட்டுக்குப் பிறகு பந்தன் வங்கி பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
இந்தியாவில் நுண்கடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பந்தன் ஃபைனான்சியல் சர்வீசஸ் வங்கி தொடங்க கடந்த 2014 ஏப்ரலில் ரிசர்வ் வங்கி அனுமதியளித்தது. அதேபோன்று, ஐடிஎஃப்சி நிறுவனமும் வங்கி தொடங்க உரிமம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com