பயணிகள் வாகன விற்பனை 7% அதிகரிப்பு

உள்நாட்டில் சென்ற பிப்ரவரி மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 7.77 சதவீதம் அதிகரித்ததாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.
பயணிகள் வாகன விற்பனை 7% அதிகரிப்பு

உள்நாட்டில் சென்ற பிப்ரவரி மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 7.77 சதவீதம் அதிகரித்ததாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்ற பிப்ரவரியில் 2,75,329 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 2,55,470 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 7.77 சதவீதம் அதிகம். 
கார், பைக், டிரக் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களின் விற்பனை 17,19,806 என்ற எண்ணிக்கையிலிருந்து 22.77 சதவீதம் அதிகரித்து 21,11,383-ஆனது.
குறிப்பாக, உள்நாட்டில் கார் விற்பனை 3.7 சதவீதம் அதிகரித்து 1,72,737-லிருந்து 1,79,122-ஆனது. பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 21.82 சதவீதம் வளர்ச்சி கண்டு 80,254-ஆக இருந்தது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 31.13 சதவீதம் அதிகரித்து 87,777-ஆனது. இருசக்கர வாகன விற்பனை 23.77 சதவீதம் உயர்ந்து 16,85,814-ஆகவும், மோட்டார் சைக்கிள் விற்பனை 26.48 சதவீதம் அதிகரித்து 10,53,230-ஆகவும் காணப்பட்டது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனரக பேருந்துகள் தவிர்த்து, கிராம மற்றும் நகர்ப் புறங்களில் தேவை அதிகரிப்பால் பயணிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மோட்டார் வாகன விற்பனையும் சென்ற மாதத்தில் சிறப்பாக இருந்தது. ஆனால் ஜிஎஸ்டி ரீபண்டு பிரச்னைகளால் பல்வேறு நிறுவனங்களின் வாகன ஏற்றுமதி பாதிப்புக்குள்ளானது. 
நடப்பு நிதி ஆண்டில் முதல் முறையாக இருசக்கர வாகனம்-மோட்டார் சைக்கிள் பிரிவில் உற்பத்தி 2.3 கோடியையும், விற்பனை 2 கோடியையும் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக சியாம் அமைப்பின் தலைமை இயக்குநர் வினோத் மாத்துôர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com