'இந்​தி​யா​வின் பொரு​ளா​தார வளர்ச்சி 7.3 சதவீதத்தை எட்டும்'

அடுத்த நிதி ஆண்​டில் இந்​தி​யா​வின் பொரு​ளா​தார வளர்ச்சி 7.3 சத​வீ​தத்தை எட்டும் என தரக்​கு​றி​யீட்டு நிறு​வ​ன​மான 'ஃபிட்ச்' மதிப்​பிட்​டுள்​ளது.அமெ​ரிக்​கா​வைச் சேர்ந்த அந்த நிறு​வ​னம்
'இந்​தி​யா​வின் பொரு​ளா​தார வளர்ச்சி 7.3 சதவீதத்தை எட்டும்'

அடுத்த நிதி ஆண்​டில் இந்​தி​யா​வின் பொரு​ளா​தார வளர்ச்சி 7.3 சத​வீ​தத்தை எட்டும் என தரக்​கு​றி​யீட்டு நிறு​வ​ன​மான 'ஃபிட்ச்' மதிப்​பிட்​டுள்​ளது.
அமெ​ரிக்​கா​வைச் சேர்ந்த அந்த நிறு​வ​னம் இது​கு​றித்து சர்​வ​தேச பொரு​ளாô​தர ஆய்​வ​றிக்​கை​யில் மேலும் தெரி​வித்​தி​ருப்​ப​தா​வது:
உள்​கட்​ட​மைப்பு திட்டங்​க​ளில் மேற்​கொள்​ளப்​ப​டும் முத​லீடு விறு​வி​றுப்​ப​டைந்​துள்​ளது. அதே​ச​ம​யத்​தில், சரக்கு மற்​றும் சேவை வரி விதிப்​பால் (ஜிஎஸ்டி) ஏற்​பட்ட பாதிப்​பு​க​ளும் படிப்​ப​டி​யாக மாறி வரு​கின்​றன. 
இவற்​றைக் கருத்​தில் கொண்​டால், அடுத்த நிதி ஆண்​டில் இந்​தி​யா​வின் பொரு​ளா​தார வளர்ச்சி 7.3 சத​வீ​தத்​தைத் தொடும். மேலும், இது, 2019-20-ஆம் நிதி ஆண்​டில் 7.5 சத​வீ​த​மாக அதி​க​ரிக்​கும். 
அதே​ச​ம​யம், நடப்பு நிதி ஆண்​டில் இந்​திய பொரு​ளா​தார வளர்ச்சி 6.5 சத​வீ​த​மா​கவே இருக்​கும். பண​வீக்​கம் 2018 மற்​றும் 2019-இல் 5 சத​வீ​தத்​துக்​கும் குறை​வா​கவே காணப்​ப​டும். இருப்​பி​னும், இது ரிசர்வ் வங்கி இலக்கை காட்டி​லும் அதி​கம் என்​பது நினை​வு​கூ​ரத்​தக்​கது.
சர்​வ​தேச பொரு​ளா​தார வளர்ச்​சி​யைப் பொருத்​த​மட்​டில் தொடர்ந்து மூன்​றாண்​டு​க​ளாக வரும் 2019-ஆம் ஆண்டு வரை​யில் 3 சத​வீ​தத்​துக்​கும் கூடு​த​லா​கவே இருக்​கும் என 'ஃபிட்ச்' அந்த ஆய்​வ​றிக்​கை​யில் தெரி​வித்​துள்​ளது.
மத்​திய புள்​ளி​யி​யல் அலு​வ​ல​கம் (சிஎஸ்ஓ), இந்​தி​யா​வின் பொரு​ளா​தார வளர்ச்சி 2016-17 நிதி ஆண்​டில் 7.1 சத​வீ​த​மாக இருந்த நிலை​யில் பல்​வேறு கார​ணங்​க​ளால் நடப்பு நிதி ஆண்​டில் அது 6.6 சத​வீ​த​மாக மட்டுமே இருக்​கும் என தெரி​வித்​தி​ருந்​தது. 
இந்த நிலை​யில், 'ஃபிட்ச்' நிறு​வ​னம் அதை விடக் குறை​வாக கணித்​துள்​ளது கு​றிப்​பி​டத்​தக்​க​து.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com