ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: மத்திய நிதியமைச்சகம் தகவல்

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. 
ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: மத்திய நிதியமைச்சகம் தகவல்

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும் மொத்தம் ரூ..1,03,458 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் (சி) ஜிஎஸ்டி ரூ.18,652 கோடி, (எஸ்) ஜிஎஸ்டி ரூ.25,704 கோடி, ஒருங்கிணைந்த (ஐ) ஜிஎஸ்டி ரூ.50,548 கோடி (இதில், இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி ரூ.21,246 கோடி) கூடுதல் வரி (செஸ்) ரூ.8,554 கோடி (இதில், இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி ரூ.702 கோடி) வசூலாகியுள்ளது.

இதில் மத்திய மற்றம் மாநில அரசுகளுக்கு (சி) ஜிஎஸ்டி ரூ.32,493 கோடி மற்றும் (எஸ்) ஜிஎஸ்டி ரூ.40,257 கோடி வருவாய் ஏற்பட்டுள்ளது. இது பொருளாதார முன்னேற்றத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. இருப்பினும் நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால் பலர் தங்களின் வரி பாக்கிகளை செலுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இந்த மாத ஜிஎஸ்டி வசூலை எதிர்கால போக்காக கருத இயலாது என்று தெரிவித்திருந்தது.

முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இதன்படி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நிதியாண்டில் ரூ.7.41 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஜூலை முதல் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை சராசரியாக மாதம் ரூ.89,000 கோடி ஜிஎஸ்டி வசூலானது. ஆனால் நிதியாண்டின் கடைசி மாதம் மட்டும் கூடுதலாக ரூ.24,000 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.

மொத்தம் வசூலாகியுள்ள ரூ.7.41 லட்சம் கோடியில், ரூ.1.19 லட்சம் கோடி மத்திய (சி) ஜிஎஸ்டி, ரூ.1.72 லட்சம் கோடி மாநில (எஸ்) ஜிஎஸ்டி, ரூ.3.66 லட்சம் கோடி ஒருங்கிணைந்த (ஐ) ஜிஎஸ்டி ஆகும். இதில், இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி ரூ.1.73 லட்சம் கோடி ஆகும். மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்து மற்றும் இறக்குமதிப் பொருள்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ரூ.62,021 கோடி கூடுதல் வரி (செஸ்) வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகமான முதல் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வரி இழப்பீட்டை ஈடு செய்ய மத்திய அரசு ரூ.41,147 கோடி அளித்துள்ளதாக தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com