இந்தியச் சாலைகளில் டுகாடி மான்ஸ்டர் 821!

இந்தியச் சாலைகளில் டுகாடி மான்ஸ்டர் 821!

இத்தாலியை சேர்ந்த சூப்பர் பைக் தயாரிப்பாளரான டுகாடி நிறுவனம், தனது "மான்ஸ்டர் 821' ரக மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்தாலியை சேர்ந்த சூப்பர் பைக் தயாரிப்பாளரான டுகாடி நிறுவனம், தனது "மான்ஸ்டர் 821' ரக மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
யூரோ-4 தர நிர்ணய அளவுகளைக் கொண்ட இந்த பைக்கின் விற்பனையக விலை, ரூ.9.51 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 821 சிசி திறன் கொண்ட இந்த பைக்கின் இரட்டை சிலிண்டர் என்ஜின், 109 ஹெச்.பி. சக்தியை வெளிப்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. 6 ஸ்பீட் கியர்பாக்ஸ், திரவ குளிரூட்டி, இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் போன்றவை இந்த பைக்கின் சிறப்பம்சங்களில் சில.
ஏற்கெனவே இந்த பைக்குகளுக்கான முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில், வரும் ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து "மான்ஸ்டர் 821' வாடிக்கையாளர்களின் கைகளுக்குக் கிடைக்கத் தொடங்கும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com