பஜாஜ் ஆட்டோ லாபம் ரூ.1,175 கோடியாக உயர்வு

பஜாஜ் ஆட்டோ நான்காம் காலாண்டில் ரூ.1,175 கோடி நிகர லாபம் ஈட்டியது.
பஜாஜ் ஆட்டோ லாபம் ரூ.1,175 கோடியாக உயர்வு

பஜாஜ் ஆட்டோ நான்காம் காலாண்டில் ரூ.1,175 கோடி நிகர லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மார்ச் காலாண்டில் அனைத்து பிரிவிலான வாகன விற்பனையும் சிறப்பான அளவில் இருந்தது. இதையடுத்து, அந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.6,773.30 கோடி வருவாய் ஈட்டியது. 2016-17 நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.5,212.83 கோடியாக காணப்பட்டது. விற்பனை வருவாய் அதிகரிப்பையடுத்து, நிகர லாபம் ரூ.862.25 கோடியிலிருந்து 36.32 சதவீதம் உயர்ந்து ரூ.1,175.47 கோடியானது.
2017-18 முழு நிதி ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.23,088.03 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.25,563.26 கோடியாகவும், நிகர லாபம் ரூ.4,079.49 கோடியிலிருந்து 3.41 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.4,218.95 கோடியாகவும் இருந்தன.
பங்கு ஒன்றுக்கு ரூ.60 ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது என பஜாஜ் ஆட்டோ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com