4ஜி சேவையில் புது வியூகம்

தொலைத் தொடர்பு சேவையில் தற்போது நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள வோடபோன் ஐடியா அளித்து வரும் 3ஜி மொபைல் சேவைகளை நிறுத்திவிட்டு, 4ஜி சேவையில் கவனம் செலுத்த திட்டமிட்டு வருவதாக அந்நிறுவன
4ஜி சேவையில் புது வியூகம்

தொலைத் தொடர்பு சேவையில் தற்போது நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள வோடபோன் ஐடியா அளித்து வரும் 3ஜி மொபைல் சேவைகளை நிறுத்திவிட்டு, 4ஜி சேவையில் கவனம் செலுத்த திட்டமிட்டு வருவதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வோடபோன் நிறுவனத்துடன் ஐடியா அண்மையில் இணைந்தது. இதையடுத்து, இந்திய தொலைத் தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கையில் முதலிடத்தைப் பிடித்தது வோடபோன் ஐடியா. முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள வோடபோன் ஐடியா புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. இதற்காக, 4ஜி சேவையில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.

2ஜி, 3ஜி சேவைகளைக் குறைத்து, 4ஜி சேவைகளை விரிவுபடுத்துவது அதில் ஒன்றாகும். பெருநகரப் பகுதிகளில் தற்போது 2ஜி, 3ஜி சேவைகளைப் பயன்படுத்துவோர் நிச்சயம் அடுத்தகட்டமாக 4ஜி சேவைக்கு மாறுவார்கள் என்று அந்நிறுவனம் நம்புகிறது. எனவே சென்னை, மும்பை போன்ற இடங்களில் தனது 4ஜி விரிவாக்க வியூகத்தை செயல்படுத்த முனைந்துள்ளது.

இதற்காக தனது வசமுள்ள 900மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது. இந்த அலைக்கற்றை மூலம் இப்போது 2ஜி சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதே அலைக்கற்றை மூலம் 4ஜி சேவைகளையும் அளிக்க முடியும். முதல் கட்டமாக மும்பையில் இதற்கான பரிசோதனைகளை அண்மையில் தொடங்கியது வோடபோன் ஐடியா. 
  900மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை 4ஜி சேவைக்கு முழுவதுமாக மாற்றியதும், 1800 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை மூலமாக 2ஜி சேவை மட்டும் தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. படிப்படியாக 3ஜி சேவை நிறுத்தப்படும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com