சாம்சங் கேலக்ஸி ஏ9 அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி ஏ9 அறிமுகம்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ9 வகை ஸ்மார்ட்போனை இந்திய சந்தைகளில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. 


சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ9 வகை ஸ்மார்ட்போனை இந்திய சந்தைகளில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. 
இதுகுறித்து சாம்சங் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் (செல்லிடப்பேசி வர்த்தகம்) ஆதித்யா பாபர் கூறியதாவது:
இந்திய பிரிமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் வலுவான இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய ரக ஸ்மார்ட்போன் 6.3 அங்குல திரை, 24 எம்பி முன்பக்க கேமராவுடன் சேர்த்து நான்கு கேமரா, ஆக்டா-கோர் பிராசஸர், 128 ஜிபி உள்நினைவக திறன் (512 ஜிபி வரையில் நீடித்துக் கொள்ளத்தக்கது), 3,800 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியது. 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் என இருவகைகளில் இப்புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.36,990-ஆகும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com