விட்டாரா பிரெஸ்ஸா உற்பத்தியை அதிகரிப்பதில் தீவிரம்: மாருதி சுஸுகி

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா கார் உற்பத்தியை அதிகரிப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
விட்டாரா பிரெஸ்ஸா உற்பத்தியை அதிகரிப்பதில் தீவிரம்: மாருதி சுஸுகி


மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா கார் உற்பத்தியை அதிகரிப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் (சந்தைப்படுத்துதல் & விற்பனை) ஆர் எஸ் கல்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வாடிக்கையாளர்களிடையே விட்டாரா பிரெஸ்ஸா மாடல்களுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. தற்போது அந்த காருக்கான காத்திருப்பு காலம் நான்கு வாரங்களாக உள்ளது. இந்த நிலையில், அந்த மாடலுக்கான காத்திருப்பு காலத்தை குறைக்கும் பணிகளில் நிறுவனம் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, விட்டாரா பிரெஸ்ஸா தயாரிப்பு பணிகள் வேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. 
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் பிரெஸ்ஸாவின் உற்பத்தி 94,000 என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டின் இதே கால அளவு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம்.
இதற்காக, குஜராத்தில் உள்ள சுஸுகி மோட்டார் ஆலை முழு உற்பத்தி திறனில் இயங்கி வருகிறது. அங்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது என்றார் அவர்.
கடந்த நிதியாண்டில் மாருதி சுஸுகி 1.48 லட்சம் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான கால அளவில் இதன் விற்பனை 95,000-மாக காணப்பட்டது.
இம்மாடல் அறிமுகப்படுத்தப்பட்ட 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரையில் ஒட்டுமொத்த அளவில் 3.57 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளதாக மாருதி சுஸுகி இந்தியா
நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com