அந்நியச் செலாவணி கையிருப்பு 514 கோடி டாலர் சரிவு

தொடரும் ரூபாய் மதிப்பு சரிவால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 514 கோடி டாலர் (ரூ.35,980 கோடி) சரிவடைந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 514 கோடி டாலர் சரிவு

தொடரும் ரூபாய் மதிப்பு சரிவால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 514 கோடி டாலர் (ரூ.35,980 கோடி) சரிவடைந்துள்ளது.
 இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு சரிவடைந்ததையடுத்து, கையிருப்பில் உள்ள செலாவணி அக்டோபர் 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 514 கோடி டாலர் சரிந்து 39,446 கோடி டாலராகியுள்ளது.
 இதற்கு முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 91.58 கோடி டாலர் குறைந்து 39,960 கோடி டாலராக காணப்பட்டது.
 ஒட்டுமொத்த கையிருப்பில் பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 523 கோடி டாலர் குறைந்து 36,999 கோடி டாலராக இருந்தது. தங்கத்தின் கையிருப்பு 7.14 கோடி டாலர் உயர்ந்து 2,052 கோடி டாலராக காணப்பட்டது.
 சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் 64 லட்சம் டாலர் உயர்ந்து 147 கோடி டாலராகவும், கையிருப்பு நிலை 1.07 கோடி டாலர் உயர்ந்து 247 கோடி டாலராகவும் இருந்தது என ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் காணப்படும் தொடர் சரிவு அந்நியச் செலாவணி கையிருப்பில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, சமீப பத்தாண்டு காலத்தில் காணப்படாத வகையில் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நடப்பு நிதியாண்டு தொடக்கத்திலிருந்து ரூபாய் மதிப்பு சரிவை தடுத்தும் நிறுத்தும் வகையில் 4,000 கோடி டாலரை ரிசர்வ் வங்கி, சந்தையில் விற்பனை செய்துள்ளது.
 சென்ற ஜனவரி மாதத்திலிருந்து ரூபாய் மதிப்பு 16 சதவீதத்துக்கும் மேலாக சரிவைடந்துள்ளது. கடந்த வாரத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 74.43-ஆக இருந்தது. செலாவணி சந்தையில் கடந்த வெள்ளியன்று ரூபாய் மதிப்பு 29 காசுகள் உயர்ந்து 73.32-ஆக நிறைவடைந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com