அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.12-ஆக கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.12-ஆக கடும் சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.12- ஆக திங்கள்கிழமை மாலை சரிந்தது.

அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.12- ஆக திங்கள்கிழமை மாலை சரிந்தது.

ஈரான் மீதான பொருளாதாரத் தடை, சீன - அமெரிக்க வர்த்தகப் போர், துருக்கி, ஆர்ஜென்டீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அந்நிய நேரடி முதலீடு குறைவு, கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத அளவுக்கு சரிவை கண்டு வருகிறது.

இதனால், கடந்த ஒரு வாரமாக சரிவு தொடர்ந்தாலும், அதிகபட்சமாக ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 71 என்ற அளவுக்கு வெள்ளிக்கிழமை சரிந்தது வர்த்தகத் துறையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் ரூ.70.77-ல் இருந்து மாலை வர்த்தகம் முடிவடைந்த போது ரூ.71.12-ஆக கடுமையாகச் சரிந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com