"இந்தியாவின் மின்னணு வர்த்தக சந்தை 10,000 கோடி டாலரைத் தாண்டும்'

இந்தியாவின் மின்னணு வர்த்தக சந்தை (இ-காமர்ஸ்) வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 10,000 கோடி டாலரை தாண்டும் என்பது
"இந்தியாவின் மின்னணு வர்த்தக சந்தை 10,000 கோடி டாலரைத் தாண்டும்'

இந்தியாவின் மின்னணு வர்த்தக சந்தை (இ-காமர்ஸ்) வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 10,000 கோடி டாலரை தாண்டும் என்பது நாஸ்காம் மற்றும் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் இந்தியா நிறுவனங்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
 இதுகுறித்து அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மின்னணு சில்லறை வர்த்தகம் மற்றும் மின்னணு சுற்றுலாப் பயண வர்த்தகம் மின்னணு வணிக சந்தையில் தொடர்ந்து 90 சதவீத பங்களிப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளன. தற்போது, ஆன்லைன் மூலமான நிதி சேவைகளும் வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
 இதன் காரணமாக வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் மின்னணு வர்த்தக சந்தை 10,000 கோடி டாலரை தாண்டும். தற்போதைய நிலையில், இ-கமார்ஸ் சந்தை மதிப்பானது 3,500 கோடி டாலர் அளவிற்கு உள்ளது. எனவே அடுத்த ஐந்தாண்டுகளில் மட்டும் இத்துறையின் வளர்ச்சியானது 25 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மின்னணு வர்த்தக சந்தைக்கு வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் உள்ளது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com