நடிகர் தனுஷின் ஹாலிவுட் படம் துவக்கம்

நடிகர் தனுஷ் ஹாலிவுட் படத்தில் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
நடிகர் தனுஷின் ஹாலிவுட் படம் துவக்கம்

நடிகர் தனுஷ் ஹாலிவுட் படத்தில் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சமீபத்தில் 'விஐபி-2' திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தின் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து 'தி ஆர்டிஸ்ட்' திரைப்பட நாயகி பெர்னிஸ் பெஜோ, உமா துர்மான் மற்றும் அலெக்ஸஸாட்ரா தாத்ரியோ உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். தற்போது இதன் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் நடைபெற்று வருகிறது.

படத்திற்காக தனுஷ் 3 மாதங்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிரஞ்சு நாவலை தழுவி உருவாகவுள்ள இப்படத்தை கனடா இயக்குநர் கேன் ஸ்காட் இயக்கவிருக்கிறார். இந்தியா, கனடா, உள்ளிட்ட நாடுகளில் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில் ஹாலிவுட் படப்பிடிப்பில் தனுஷ் கலந்துகொண்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'வடசென்னை', 'மாரி 2', 'கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம்' மற்றும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தவிருக்கிறார் தனுஷ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com