புருவம் உயர்த்த வைக்கும் பிரியங்கா சோப்ரா!

பாலிவுட், கோலிவுட், மோலிவுட் என இந்தியாவில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் வரை
புருவம் உயர்த்த வைக்கும் பிரியங்கா சோப்ரா!

பாலிவுட், கோலிவுட், மோலிவுட் என இந்தியாவில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் வரை புகழ் பெற்ற நடிகை பிரியங்கா சோப்ராவின் முக அழகை மேம்படுத்துவது அவருடைய அழகிய புருவங்கள்தான்.

34 வயதான இவர் தன் அழகை மெருகேற்றிக் கொள்வதில் அக்கறை உள்ளவர் என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். முகத்தின் எழிலை அதிகரிக்க தன் புருவத்தை மிக அழகாக செதுக்கிப் பாதுகாக்கிறார். இரண்டு புருவமும் நேர்த்தியாகவும் இம்மி பிசகாத ஒழுங்குத்தன்மையுடன் ஒரே போல் இருக்கும்படி பார்த்துக் கொள்வாராம் பிரியங்கா.

'இன்ஸ்டைல் ஆன்லைன்' எனும் பத்திரிகையில் அவர் தன் முக அழகைப் பற்றி கூறும் போது ‘என்னுடைய தோற்றம் குறித்து எப்போதும் அதிக அக்கறையுடன் இருப்பேன். அதிலும் குறிப்பாக என்னுடைய புருவங்கள் அடர்த்தியாக, அழகாக இருக்கும். அந்த அடர்த்தியை எப்போதும் ஒரே சீராக  வைத்திருக்கிறேன். இத்தகைய பராமரிப்பு சரியான பலன் கொடுத்துள்ளது. இப்போது புருவங்கள்தான் எனக்கு கூடுதல் அழகைத் தருகிறது.

பொதுவாக அனைவருக்கும் இரண்டு புருவங்களில் சிற்சில வித்தியாசங்கள் இருக்கும். சில பிசிறுகள் கூட இருக்கும். உற்றுப் பார்த்தால் ஆறு வித்தியாசங்களைக் கூடச் சொல்லிவிடலாம். ஒரே சாயலில் இருக்கும் அக்கா தங்கை போல், அல்லது கசின்கள் போல அவை இருக்கும். ஆனால் என்னுடைய புருவங்கள் அப்படி அல்ல, அச்சு அசலாக இரட்டைக் குழந்தைகள் போல, ஒன்று போல் மற்றொன்று இருக்கும்.’ என்றார்.

2000-ல் உலக அழகிப் பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா அழகாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் தெளிவாகவும் சில விஷயங்களைச் சொன்னார். ‘ஒருவர் தம் தோற்றத்தால் ஒருபோதும் அவமானப்படக் கூடாது. குறையே இல்லாத மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? தங்களிடம் பிடிக்காத ஏதோவொன்று எல்லோருடமும் உண்டு. சிலருக்கு மூக்கு அல்லது தாடை அல்லது முகத்தில் ஏதோ ஒரு பகுதி சிறப்பாக இருக்காது. அதனால் என்ன? இது குறித்து அவமானப்படவே தேவையில்லை. நம்மிடம் சிறப்பாக எது உள்ளதோ அதை நினைத்து பெருமைப்பட வேண்டும். நீங்கள் நீங்களாகத் தான் பிறந்தீர்கள். வேறு ஒருவராக இல்லை. உங்களிடம் மிகச் சிறப்பான அம்சம் எதுவென்பதை கண்டுபிடித்து அதை மெருகேற்றிக் கொள்ள வேண்டும். என் அம்மா எனக்கு கூறிய அறிவுரை இதுதான். இதையே நானும் பின்பற்றுவதுடன் மற்றவர்களுக்கும் சொல்கிறேன்’ என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com