தோனி படம்: தமிழ்நாட்டிலும் சூப்பர் ஹிட்!

தமிழ்நாட்டிலும் ஒரு தமிழ்ப் படத்துக்கு இணையான வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது.
தோனி படம்: தமிழ்நாட்டிலும் சூப்பர் ஹிட்!

இந்திய அணி கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இயக்கம் - நீரஜ் பாண்டே. இந்தப் படம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.

60 நாடுகளில், 45000 திரையரங்குகளில் வெளியான தோனி படம், முதல் நாளன்று ரூ. 21 கோடியை வசூலித்தது. மேலும், முதல் மூன்று நாள்களில், இந்தியா முழுக்க ரூ. 66 கோடியை வசூலித்து நூறு கோடி ரூபாய் வசூலை நோக்கி வெற்றிநடை போடுகிறது.

தமிழ்நாட்டிலும் தோனி படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்பதாலும் தோனி மீது ரசிகர்கள் உணர்வுபூர்வமான பந்தம் கொண்டுள்ளதால், இந்தப் படத்துக்குத் தமிழ்நாட்டிலும் ஒரு தமிழ்ப் படத்துக்கு இணையான வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது.

தமிழில் 205, ஹிந்தியில் 27 என தமிழ்நாட்டில் இந்தப் படம் 232 திரையரங்குகளில் வெளியாகி, முதல் மூன்று நாள்களில் மட்டும் ரூ. 7 கோடி வசூலித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com