ஒரு சிறந்த நட்சத்திரம் உருவாகிவிட்டார்: சிவகார்த்திகேயனுக்கு ரஜினி வாழ்த்துமழை!

சிவகார்த்திகேயனும் ரஜினியின் வாழ்த்து குறித்து ட்வீட் செய்துள்ளார்.... 
ஒரு சிறந்த நட்சத்திரம் உருவாகிவிட்டார்: சிவகார்த்திகேயனுக்கு ரஜினி வாழ்த்துமழை!

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத்.

அக்டோபர் 7-ம் தேதி வெளியான ரெமோ, வசூலில் சாதனை நிகழ்த்தி வருகிறது. முதல் நாளிலேயே ரூ. 8 கோடி வரை வசூல் செய்தது. சிவகார்த்திகேயன் படங்களில் அதிக முதல்நாள் வசூல் கண்டது ரெமோதான். முதல்வார விடுமுறை தினங்களின் வசூலாக ரூ. 50 கோடியை அள்ளியிருக்கிறது. இந்தப் படத்துக்குத் தமிழ்நாட்டில் ரூ. 37 கோடியும் வெளிநாட்டில் ரூ. 13 கோடியும் முதல் வாரத்தில் கிடைத்துள்ளது.

தமிழில் முக்கியமான படங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு சம்பந்தபட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பது ரஜினியின் வழக்கம். அந்த வரிசையில் ரெமோவும் இடம்பிடித்துள்ளது.

ரெமோ படத்தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா, ரஜினியின் பாராட்டு குறித்து ட்விட்டரில் கூறியதாவது: ரெமோ படம் பார்த்தபிறகு ரஜினி எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் போன் செய்து பாராட்டினார். அவருக்கு ரெமோ படம் மிகவும் பிடித்துள்ளது. ரஜினியின் தீவிர ரசிகனான எனக்கு இது மிகப்பெரிய அங்கீகாரம் என்று ட்வீட் செய்துள்ளார்.  

இதையடுத்து சிவகார்த்திகேயனும் ரஜினியின் வாழ்த்து குறித்து ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது: ஒரு சிறந்த நட்சத்திரம் உருவாகிவிட்டார். வாழ்த்துகள் சிவகார்த்திகேயன் என்று ரெமோ பார்த்துவிட்டு ரஜினி சார் வாழ்த்தினார். மகிழ்ச்சி என்று அவர் ட்வீட் செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com